My Blog List

Friday 17 January 2020

உறவு

உன்னை
கொச்சைப் படுத்தும்
 
உறவுகளை
உதறி தள்ளிட

யோசிப்பதே
கொச்ச்சை.



Saturday 25 May 2019

கை எட்டா தூரத்தில்

உன்
கைகளை
நான்
தொடுவதில்லை

உறக்கத்தில் கூட
என்
கை படுவதைத்
தவிர்க்கும் நீ

நினைவில்
கைபடுவதை
தவிர்காதது-என்
மனம்
நோகாதிருக்க மட்டுமே என

நான்
அறிந்தது
முதல்

Thursday 16 May 2019

சாகடிக்கும் இந்த சுதந்திரம்

மெல்ல சாகடிக்கும் இந்த சுதந்திரம் 
என்னை மட்டும் அல்ல 

நம் உறவையும் ...


நீயின்றி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் 
பெண் சுதந்திரமென நான் எண்ணுவதில்லை.

உன்னை விட்டு என்னை 
அணு அணுவாக பிய்த்தெடுக்கும் அடிகள் 
தான் அவை.

உயிருடன் இருக்கும்போதே 
அறுத்ததெடுக்கப்படுவது போல தான் 
என் மனம் கதறுகிறது.

கண்ணைக் கட்டி விட்ட படி தான் 

அடி எடுத்து  வைக்கிறேன் 

எனது அருகாமையை 
நீ மறுப்பதும் 

அதை நான் வெறுத்து அழுவதும் 
எதையும் 
மாற்றுவதாய் இல்லை.

நான் சொல்வதெல்லாம்  எல்லாம் ஒன்றுதான்
என் முதல் காதலும் -என் 
கடைசிக் காதலும் 

நீ தான் - 

நீ
மட்டும் தான்.

ஒரு வேளை இதை நீ அறிந்தால்  ..

அழுத்திக்கொண்டிருக்கும் என் மனதை 


ஒரே ஒரு முறை மகிழ்ச்சியில் நிரப்பி விடு 

அந்த நிமிடம் 
நான் இறந்தாலும் 

அது உன் மடியிலாக 

இருக்கட்டும் !

Friday 10 May 2019

மரணத்தின் முறைகள்

இறையடி சேரா மலர்கள் ...இரையாகி மகிழ்ந்தன ...
கருகி இறப்பதை விட

இரைப்பையை நிரப்பி
அவை

இறையாகின ..




Wednesday 8 May 2019

அன்னை இல்லம்🏠

தாயைப் பற்றி பேசியதெல்லாம் 
போதும்

குளிக்க வைத்து-புது
துணி உடுத்தவைத்து -அழகு
பார்த்ததெல்லாம்
போதும்

மடியில் படுத்துப் படமெடுத்ததெல்லாம்
போதும்

இனிப்பு குறைத்து 
கொழுப்பு குறைத்து- பண்டம்
ஊட்டியதெல்லாம்
போதும்

எதேதோ  பரிசளித்ததெல்லம்
போதும்

கொஞ்சம் இடம்
கொடுங்கள் போதும்...!!!

மகனும்
மகளும் வரலாம் -அவ்வழி
நோக்கி அமரவேண்டும் 

காத்திருப்பதே போதும் ...


Friday 19 April 2019

உரிமை

என்
கண்களில் 
காட்சிகள் 
காலியாகவே 
இருக்கட்டும் ..!!!

என் 
பாதைகள் 
அனைத்தும் 
தவறியதாகவே 
இருக்கட்டும் ...!!! - அவை 
எல்லைகள் 
அற்றதாகவே 
இருக்கட்டும் ...!!! 

திக்கு திசை 
இன்றி -என் 
பயணம்
தொடரட்டும் 
எவ்வழியும் - என் 
வழியாகட்டும்!!..

தொடங்கிய 
இடத்தில் முடிந்தாலும் - நான்
தொலைந்தே 

போயிருந்தாலும் 

என் 
பயணம் 
எனதாகவே 

இருக்கட்டும்   ... !!! 

வண்ண மலர்களை

அழகாய் இருந்த 
பூக்களை 
அவள் கோர்த்திருந்தாள் 

கோர்த்திருந்த பூக்களை 
சூடிக்கொண்டாள் 

அழகாய் தெரிந்த 
கற்களை
அவள் சேர்த்திருந்தால் 

வண்ன வண்ண மலர்களை 
அதில் தீட்டியி ருந்தால் 

 தீட்டிய மலர்களையும்
சூட்டிக்கொண்ட மலர்களையும் 

சேர்த்தே 

நேசித்திருந்தது 
அவளின் 
மனம்  

உடனே வாடும் 
மலர்களையும் 

நின்று தேயும் கற்களையும் 

அவள் 
விடுவதாய் இல்லை 


என்றுமே !!

மனதின் ஓலம்

துரத்திக் கொண்டிருக்கும் 
நினைவுகளைக் 

கைக்கொண்டு தடுக்கின்றேன் 
கண்ணீரில் கரைக்கப் பார்க்கிறேன்
கதறலின் ஊடே மறைக்கிறேன் 

அழகான முத்தங்கள் 
அரவணைத்த கரங்கள் 
கோர்த்திருந்த விரல்கள் 
தழுவியிருந்த தோள்கள் -என 

மறுக்கப்பட்ட   அனைத்தும் 

நான் மட்டுமே அறிய 
நினைவுகளாய் துரத்தியி ருக்க 


கண் மூடி 

போதும் போதும் என 

உள்வாங்கி

என்னுள்ளேயே 
தொலைகிறேன்.



Monday 1 August 2016

கண் படா கொம்புகள்

Thanks for the image


கண் படா - தன் 
கொம்புகளைத் 
தீட்டிக்கொள்கின்றாள்

வடிவில்லாத கொம்புகளுக்கு 
வர்ணமிட்டு ...வளமாக்குகிறாள் 

கூற்மையற்ற கொம்புகளால் 
அனைத்தையும் குத்திக் கிழிக்கையில் 

கொம்புகளின் கணம் பெருகி 
அவளும் அமுங்கி அழுவதைக்கண்டு 

கண் படா கொம்புகள் 
களிப்புடன் வளருகின்றன.

உருவமும் உணர்வும் 
இல்லாத கொம்புகளை 
வளர்ப்பவள் – தன் 

உறவுகளை உரமாக்குகிறாள்...

Thursday 30 June 2016

காலம்










சென்று வந்த இடங்களை –மீண்டும் 
நினைவில் வைத்துத் தடவிப்  
பார்க்கின்றேன்.
விரல்கள் உணராத நினைவுகளை - மனம்
வருடிப் பார்த்தது...!!!

சுகங்கள் எல்லாம் நிழலாகியிருக்க ...

துக்கங்கள் ...

இன்னமும் இதயத்தைப்

பிழிந்தெடுத்தன

தீர்க்கப்படாத ஆரம்பங்கள் 
முண்டங்களாக என்னை முறைத்தன ..!!!... 
இரக்கமின்றி இதயத்தை 
இருக்கின...!!!

இருண்டு - இருபட்டுபோன 
இந்த இதயக் காயங்களை ஆற்ற - காலத்திற்கும்
இல்லை அனுமதி...!!!


என்
காலம் முடிகையில் - இந்த
காயங்களும் காற்றாகி - இனி
என்றென்றுமே நிலைத்திருக்கும் 

இன்னொரு மனதில்....!!!




Tuesday 28 June 2016

அன்பு

*என்றுமே என்னை 
நிற்க வைத்து 
அழகு பார்த்த பூமி – இன்று
விழ வைத்தது ... !!!
அன்பாய் கன்னத்தில் 
முத்தமிடவாகதான் 
இருக்கும்....*

இறப்பின் மரணம்

சுவாசம் வெரும்
காற்றாகி போகையில்
நிகழவில்லை-என்
மரணம்...

சுமையென
எனை நீ
விலகியபோதே
ஜீவன்
மரணித்துவிட்டிருந்தது...

மீதமிருந்த துடிப்பும்
நரம்பினுடையதே
இதயம்
இறுகியிறந்திருந்தது

கோணல்களின்
முடிவில்
அறிமுகமான-நமது
நேர்முகநட்பும்
அழிந்திருந்தது...

இனி -என்
மரணம் 
மறுபடியும்
பிறக்கபோவதில்லை ...

Tuesday 24 May 2016

ஆயுள்

குறைந்துக் கொண்டே
வரும் எனது - ஆயுள்
நாட்களை
கொண்டாடித் தீர்த்துவிடுகிறேன்
பிறந்த நாளாய் ...

மரணத்தை நோக்கிய - என்
பயணத்தைக் கொண்டாடுகையில்
பல நண்பர்களையும்
சில உறவினர்களையும்
சேர்த்துக் கொள்கிறேன்.

ஆத்மாவின் குடியிருப்புக்
கூட்டின் ஒப்பந்த பத்திரத்தைக்
கையெழுத்திட்டுத் தருகையில்
கைதட்டிப் பாடி சிரிக்கும்
கூட்டத்தைக் கண்டு – நானும்
சிரிகின்றேன்.

அந்தக் காலம் அதிக தூரமில்லை
இதே போன்று
மலர்களைத் தூவி ...
தீபம் ஏற்றி ...
பாடல் பாடி ...




Thursday 31 March 2016

காமம்

நீ சம்மதித்த 
அந்த நொடியில்
மிச்சம் மீதியிருந்த
அச்சமும் 
அசிங்கப்பட்டு ஓடியது

அன்னியமாய்...!!!

இருட்டிய நிலா

குதித்துக்
குதித்து தான்
நடக்க வேண்டியிருந்தது

குதிப்பதை
எப்படி
நடை என சொல்வது?

நா
வறண்டிருந்தது

ஏதும் இல்லை
எதுவுமே இல்லை...!!!

மூச்சி திணறுகையில்

முடிந்துவிடாத இந்த
வட்டம்
என ஏங்கிய இதயம்- இது 
சதுரம் இல்லையா 
என திகைத்தது...!

நிழல் இல்லை
ஒரே இருட்டு

சூரியன் இலையோ
என் எண்ணுகையில்- பேயும் 
இருக்காது
என திடப்படுத்தியது மனம் ...

மெல்லிய கோடு மட்டும்தெரிந்தது
வெளிச்சமான கோடு

ஒரே குதி !!

அப்பப்பா விழுந்திருந்தேன்..!
திரும்பி பார்க்கையில்
நிலா .....!!!

இப்பொழுது வெளிச்சமாய்
தெரிந்தது !

Monday 22 February 2016

இதயத்தின் இருள்

கருத்த என் கன்னங்களில்
வழிந்தோடும் கண்ணீர்
குருதியும்
தீய்ந்திருக்கும் உன்
பாராமுகம் கண்டு...

என் கதறலின் கருமையை
உன் செவியரிய  
வாய்ப்பில்லை...
என் துக்கங்களை எல்லாம்
திரட்டி
உருட்டி
எடுத்து  
உனக்கு எட்டா இடத்தில்
சேமிக்கிறேன்

ஒரு நாள்
நீயறிவாய்
கருப்பில் இருக்கும் தெளிவு
இருளில் மறைவதில்லை என.






Wednesday 3 February 2016

பரிசு

சுவடுகளே இல்லாத
இரவுகளின் வருகைகளின்
பரிசை  சுமக்கையில்

அன்று பிரியத்தால் காய்ந்து
போன உதடுகள்
இன்று பிளந்தும் போயின

குவிந்திருந்த
உன் ஸ்பரிச நினைவுகளை
துடைத்தெடுக்க
இயலாமல்
பெற்றேடுக்கிறேன்

அன்று
களவுபோனது

இன்று என்னைப்
பார்த்து கண் சிமிட்டி
சிரிக்கின்றது

நம்மின் நினைவுகளை
அசைப்போட்டு...

மீண்டும் மீண்டும் -நான்
ஆசையாய்
தழுவிட ..!!!













Tuesday 10 March 2015

~* மடியின் கனம் *~

இன்று என் மடி
நிறைந்திருந்தது

வழ வழாவென்றிருந்தாலும்
இரத்த பிசுப்பாய் இருந்தாலும்

எட்டி எட்டி உதைத்தாலும்
என் உணவை எட்டி
பறித்தாலும்

கதறி கதறி அழுதாலும்
கந்தலாய் துவண்டாலும்

என் மடியும்
தாயானதால்
நான் சிலிர்த்திருந்தேன்...

என்னை சுற்றிலும் ஒரே கூட்டம்

கொசுக்கள் இசையாய் இசைக்க
எறும்புகள் ஆட்டமாய் ஆட
கரப்பான் கை தட்ட
எலிகள் நோட்டமிட

என் மடியிலிருக்கும்
மழழையை
மகிழ்ச்சி ஆரவாரமிட்டு
வரவேற்றன.

இதுவரை இப்படி ஒரு கட்சியை
நான் காணவில்லை! -இதுவரை
என் மடி
இப்படி
கனத்ததில்லையே!

என் தாய்மை எல்லாம்
ஊற்றெடுக்க
என் மடியில் கிடக்கும்
சிசுவை அனைத்துக்கொள்கிறேன்

இனி உன் அலறல்
அடங்கட்டும்
மெல்ல ...!

Wednesday 11 February 2015

குப்பை

நீ
கொடுத்தவை
அனைத்தையும்
சேர்த்து வைத்துப் பார்கையில்

சேர்ந்தவை
அனைத்தும்
குப்பைகளாக
குழுமியிருக்க

எனது பயணத்திற்கு
ஏதுவாக..
என் பெட்டி சுமையின்றியிருக்க

தரம்பிரித்து
குப்பையை
குப்பையிலும் - நல்லதை
பெட்டியிலும் வைத்தேன்.

பொருக்கி எடுத்த
குப்பைகளை
மீண்டும் தரம்பிரித்து

இனித்தத்தையும்
ருசித்ததையும்
ரசித்ததையும்

திரும்ப பொருக்கிக்கொண்டேன்

மீதம் நின்ற குப்பைகள்

என்னை
எரித்திடாதே ...!!!
புதைத்திடாதே...!!!
என கூச்சலிட....

சீ... போகட்டும் என
அதையும் பொறுக்கியெடுத்து
பெட்டியில் வைத்தேன்

மீண்டும் என் மனபெட்டி
உன் குப்பைகளால்
நிரம்பி வழிய வழிய
சுமந்து செல்கிறேன்

சவப்பெட்டிக்குள்.

Tuesday 10 February 2015

உனது வருகை


இமைகள் முடியிந்த போது தான்
நீ வந்திருக்க வேண்டும்

உன் அருகாமையை உணர்ந்தும் -என்
இமை திறக்க மனமில்லை...

உனக்கு ஒரு சில நொடி தனிமையை கொடுக்கவே நான் விரும்பினேன்..

என்னை நீ ரசிக்க !!!

என்னை நீ காண்பாய் - என்னைக் கண்டு
ரசித்திருப்பாய் என
எண்ணி எண்ணி
சிலிர்த்திருந்தேன்.

இமைகளை மெல்லமாய் திறந்து
உன் திருட்டுத்தனத்தை ரசிக்க
எண்ணினேன்.

தன் தடத்தை
அழித்துச் சென்றிருந்தது..

உன் ஆன்மா...