My Blog List

Monday, 4 August 2014

சிரிப்பு



இறந்துக் கொண்டிருந்த 
மனிதன் 
சிரித்தபடி இருந்தான் 

மரணத்தின் ஓலம் 
அவனின் செவியில் 
விழாமல் இருக்க - சத்தமாய்
சிரித்தபடி இருந்தான்.

அவனைச் சுற்றி இருந்தவரின்
சோகத்தை விரட்ட - பல் தெரிய
சிரித்தபடி இருந்தான்

தன் மனதிலிருந்த மரணபயம்
வெளி தெரியாமலிருக்க-
கண்ணீர் சுரக்கும் வரை
சிரித்தபடி இருந்தான்.

உடலின் வலி - தன்
முளைக்கு எட்டாதபடி
விழுந்து விழுந்து
சிரித்தபடி இருந்தான்.

இறந்துவிட்ட தன் உடலைக் கண்டு
உருண்டு அழும் உறவைக் கண்டு

சிரித்தபடி இருந்தான்.