My Blog List

Saturday, 25 May 2019

கை எட்டா தூரத்தில்

உன்
கைகளை
நான்
தொடுவதில்லை

உறக்கத்தில் கூட
என்
கை படுவதைத்
தவிர்க்கும் நீ

நினைவில்
கைபடுவதை
தவிர்காதது-என்
மனம்
நோகாதிருக்க மட்டுமே என

நான்
அறிந்தது
முதல்

Thursday, 16 May 2019

சாகடிக்கும் இந்த சுதந்திரம்

மெல்ல சாகடிக்கும் இந்த சுதந்திரம் 
என்னை மட்டும் அல்ல 

நம் உறவையும் ...


நீயின்றி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் 
பெண் சுதந்திரமென நான் எண்ணுவதில்லை.

உன்னை விட்டு என்னை 
அணு அணுவாக பிய்த்தெடுக்கும் அடிகள் 
தான் அவை.

உயிருடன் இருக்கும்போதே 
அறுத்ததெடுக்கப்படுவது போல தான் 
என் மனம் கதறுகிறது.

கண்ணைக் கட்டி விட்ட படி தான் 

அடி எடுத்து  வைக்கிறேன் 

எனது அருகாமையை 
நீ மறுப்பதும் 

அதை நான் வெறுத்து அழுவதும் 
எதையும் 
மாற்றுவதாய் இல்லை.

நான் சொல்வதெல்லாம்  எல்லாம் ஒன்றுதான்
என் முதல் காதலும் -என் 
கடைசிக் காதலும் 

நீ தான் - 

நீ
மட்டும் தான்.

ஒரு வேளை இதை நீ அறிந்தால்  ..

அழுத்திக்கொண்டிருக்கும் என் மனதை 


ஒரே ஒரு முறை மகிழ்ச்சியில் நிரப்பி விடு 

அந்த நிமிடம் 
நான் இறந்தாலும் 

அது உன் மடியிலாக 

இருக்கட்டும் !

Friday, 10 May 2019

மரணத்தின் முறைகள்

இறையடி சேரா மலர்கள் ...இரையாகி மகிழ்ந்தன ...
கருகி இறப்பதை விட

இரைப்பையை நிரப்பி
அவை

இறையாகின ..




Wednesday, 8 May 2019

அன்னை இல்லம்🏠

தாயைப் பற்றி பேசியதெல்லாம் 
போதும்

குளிக்க வைத்து-புது
துணி உடுத்தவைத்து -அழகு
பார்த்ததெல்லாம்
போதும்

மடியில் படுத்துப் படமெடுத்ததெல்லாம்
போதும்

இனிப்பு குறைத்து 
கொழுப்பு குறைத்து- பண்டம்
ஊட்டியதெல்லாம்
போதும்

எதேதோ  பரிசளித்ததெல்லம்
போதும்

கொஞ்சம் இடம்
கொடுங்கள் போதும்...!!!

மகனும்
மகளும் வரலாம் -அவ்வழி
நோக்கி அமரவேண்டும் 

காத்திருப்பதே போதும் ...


Friday, 19 April 2019

உரிமை

என்
கண்களில் 
காட்சிகள் 
காலியாகவே 
இருக்கட்டும் ..!!!

என் 
பாதைகள் 
அனைத்தும் 
தவறியதாகவே 
இருக்கட்டும் ...!!! - அவை 
எல்லைகள் 
அற்றதாகவே 
இருக்கட்டும் ...!!! 

திக்கு திசை 
இன்றி -என் 
பயணம்
தொடரட்டும் 
எவ்வழியும் - என் 
வழியாகட்டும்!!..

தொடங்கிய 
இடத்தில் முடிந்தாலும் - நான்
தொலைந்தே 

போயிருந்தாலும் 

என் 
பயணம் 
எனதாகவே 

இருக்கட்டும்   ... !!! 

வண்ண மலர்களை

அழகாய் இருந்த 
பூக்களை 
அவள் கோர்த்திருந்தாள் 

கோர்த்திருந்த பூக்களை 
சூடிக்கொண்டாள் 

அழகாய் தெரிந்த 
கற்களை
அவள் சேர்த்திருந்தால் 

வண்ன வண்ண மலர்களை 
அதில் தீட்டியி ருந்தால் 

 தீட்டிய மலர்களையும்
சூட்டிக்கொண்ட மலர்களையும் 

சேர்த்தே 

நேசித்திருந்தது 
அவளின் 
மனம்  

உடனே வாடும் 
மலர்களையும் 

நின்று தேயும் கற்களையும் 

அவள் 
விடுவதாய் இல்லை 


என்றுமே !!

மனதின் ஓலம்

துரத்திக் கொண்டிருக்கும் 
நினைவுகளைக் 

கைக்கொண்டு தடுக்கின்றேன் 
கண்ணீரில் கரைக்கப் பார்க்கிறேன்
கதறலின் ஊடே மறைக்கிறேன் 

அழகான முத்தங்கள் 
அரவணைத்த கரங்கள் 
கோர்த்திருந்த விரல்கள் 
தழுவியிருந்த தோள்கள் -என 

மறுக்கப்பட்ட   அனைத்தும் 

நான் மட்டுமே அறிய 
நினைவுகளாய் துரத்தியி ருக்க 


கண் மூடி 

போதும் போதும் என 

உள்வாங்கி

என்னுள்ளேயே 
தொலைகிறேன்.