My Blog List

Thursday, 30 June 2016

காலம்










சென்று வந்த இடங்களை –மீண்டும் 
நினைவில் வைத்துத் தடவிப்  
பார்க்கின்றேன்.
விரல்கள் உணராத நினைவுகளை - மனம்
வருடிப் பார்த்தது...!!!

சுகங்கள் எல்லாம் நிழலாகியிருக்க ...

துக்கங்கள் ...

இன்னமும் இதயத்தைப்

பிழிந்தெடுத்தன

தீர்க்கப்படாத ஆரம்பங்கள் 
முண்டங்களாக என்னை முறைத்தன ..!!!... 
இரக்கமின்றி இதயத்தை 
இருக்கின...!!!

இருண்டு - இருபட்டுபோன 
இந்த இதயக் காயங்களை ஆற்ற - காலத்திற்கும்
இல்லை அனுமதி...!!!


என்
காலம் முடிகையில் - இந்த
காயங்களும் காற்றாகி - இனி
என்றென்றுமே நிலைத்திருக்கும் 

இன்னொரு மனதில்....!!!




Tuesday, 28 June 2016

அன்பு

*என்றுமே என்னை 
நிற்க வைத்து 
அழகு பார்த்த பூமி – இன்று
விழ வைத்தது ... !!!
அன்பாய் கன்னத்தில் 
முத்தமிடவாகதான் 
இருக்கும்....*

இறப்பின் மரணம்

சுவாசம் வெரும்
காற்றாகி போகையில்
நிகழவில்லை-என்
மரணம்...

சுமையென
எனை நீ
விலகியபோதே
ஜீவன்
மரணித்துவிட்டிருந்தது...

மீதமிருந்த துடிப்பும்
நரம்பினுடையதே
இதயம்
இறுகியிறந்திருந்தது

கோணல்களின்
முடிவில்
அறிமுகமான-நமது
நேர்முகநட்பும்
அழிந்திருந்தது...

இனி -என்
மரணம் 
மறுபடியும்
பிறக்கபோவதில்லை ...