My Blog List

Sunday, 29 September 2013

:: பேய்களும் பூசாரிகளும் ::




பேய்களுடன் ஆன
எனது தொடர்பு

பூசாரிகளுக்குப் பிடிப்பதில்லை.

எனக்குப் பேய்கள் ...

முருங்கை மரத்தில் தொங்க
கற்றுக்கொடுத்தன

நடு நிசி இரவில்
இஷ்டம் போல் சுற்றித்திரிய
கற்றுக்கொடுத்தன

அயல் உடலில்
அன்னியம் இல்லாது
ஊடுருவ கற்றுக்கொடுத்தன

விரட்டு விரட்டு என
எனக்கு வேண்டாதவரை
விரட்ட கற்றுக்கொடுத்தன

எனக்கே எனக்காக
பேய்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த
வித்தைகளை

பூசாரிகளுக்குப்
பிடிப்பதில்லை.

எனக்கும் பேய்களுக்குமான
தொடர்பு
மிக மிக வேகமாக
வளர

நானும் பேயாகி இருந்த நேரம் ...

பூசாரிகள்
மாறிப்போய் இருந்தனர்.

அவர்கள்
முருங்கை மரம் ஏர
பழகிக்கொண்டிருந்தனர்.




Wednesday, 25 September 2013

:: அழுகை ::

அம்மாவை நான் நிமிர்ந்து பார்த்த அந்த நொடி
அவளின் இதயத்தை பல பாகங்களாய் பிளந்திருக்கும்.

அடை மழையாய் என் கண்களிலிருந்து
கண்ணீர் பொழிவதை
அவள் தாங்கவே மாட்டாள்.

கண்களை
இன்னும் கொஞ்சம் சுருக்கி
இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கி

வாயை
ஊரும் பாம்பை போல வடிவாக்கி
பசையிட்டு ஒட்டியதை போல இழுத்து மூடி

கன்னங்களில்
கல்லைக் கட்டிவிட்டதை போல
தொங்கவிட்டு

நெற்றியை
தாராளமாக சுருக்கி
கரடு மேடாக கோடுகளை ஓடவிட்டு

அம்மாவை நான் நிமிர்ந்து பார்த்த அந்த நொடி
அவளின் இதயத்தை பல பாகங்களாய் பிளந்திருக்கும்.

:: மறுபடியும் ::


காத்திருந்த பொழுதுகள்
கனவாக

கனவுகள் மட்டுமே
தேங்கிக் கிடக்க

தேங்கிய நினைவுகள்
மறக்கப்பட

மறந்த காலங்கள்
இறந்திருக்க

இறந்த நொடிகள்
மீண்டு வருமா என
காத்திருக்க....

மறுபடியும்....

காத்திருந்த பொழுதுகள்.....



Monday, 23 September 2013

:: மறக்கப்பட்ட என் முகம் ! ::




என்றோ
பாதியாக கிழிக்கப்பட்ட 
என் முகத்தின் - மீதியை
தேடினேன்.

முன்பே ஒரு முறை
அந்த மீதியும் இரண்டாய் கிழிக்கப்பட்டு
பின் - பலவந்தமாக அது
தொலைக்கப் பட்டதாக
கூறினார்கள் ...

காணமல் போயிருந்த அந்த பாதி முகம்
திரும்பி வந்தாலும் 
அது வேறொருவரின் 
சாயலில் தான் இருக்கும்.

நான் பார்ப்பதை ...  காணாமல்
நான் சொல்வதை ...பேசாமல் 
நான் உணருவதை ... அறியாமல்

அந்த முகம் ... என் சாயல் அற்று
புது அடையாளம் பெற்றிருக்கும். 

இன்னும் அழகாக 
இன்னும் இளமையாக
இன்னும் புதுமையாக
இன்னும் கவர்ச்சியாக - அல்ல
இதில்
எதுவுமே இல்லாமல் ...

என் முகம் 
என்னிடமே - தன்
அடையாளத்தைத் 
தொலைத்திருக்கும் ...!!!



Wednesday, 18 September 2013

:: காதல் ::



காத.......லா ....

காத...........லி...

நமது செல்ல பெயர்கள்

லா......லி ! லா......லி! லா.......லி! 

நமது காதல் 
பாடுது

லாலி ...!!!


:: வேண்டாம் ::



இன்று வேண்டாம் என்றாய்

என்றுமே வேண்டாம் என்றதை போல
மனம் ரணமானது


:: காலம் பதில் சொல்லும், சொல்லுமா? ::




காலத்தை கட்டி வைத்து 
கேட்கனும் -ஏன்
உனக்கு இவ்வளவு அவசரம்...

காலம் தான் பதில் சொல்லும் என்றார்கள்

நீ போகும் அவசரத்தில் -என்
கேள்விகளுக்கு விடையளிக்காமல் போய்விடாதே

வாய் விட்டு சொன்னால் காற்றோடு போய்விடுமோ என
மனதினுள் வைத்திருக்கிறேன் காலமே..
என் மனதை கேள் - அதன்
கேள்விகள் தெரியும்

பெண் மனம் இது
ஆகையால் -கொஞ்சம்
பொறுமை... திறமையோடு கேள்
இல்லையேல் எதுவுமே புரியாமல் போய்விடும் உனக்கு.