My Blog List

Thursday, 31 July 2014

பிரிவு

சிதறியிருந்த செல்களை
பார்க்கையில் 
....
சிரிப்பதா - இல்லை 
அழுவதா என்றே தெரியவில்லை. 
....
ஒவ்வொன்றாய் எடுக்கையில்
மனம் தானே
ஒவ்வொன்றையும் எண்ணியது.
.....
சற்று மூன் வரையிலும்...
ஒன்றாய் இருந்தது -ஒரே
வட்டமாக இருந்தது
இப்பொழுது
சில சதுரமாய் ...
பல முக்கோணமாய் ...
பற்பல துகள்களாய் ...
தெறித்திருந்தது...!
.....
சிதறிய செல்களை -எப்படியும்
ஒட்டிடலாம் -என்றெண்ணியிருந்த மனம்
எண்ணுவதை நிறுத்தியிருந்தது.
.....
துகள்களை ஒட்டுவது எப்படி?

No comments:

Post a Comment