My Blog List

Wednesday, 25 September 2013

:: அழுகை ::

அம்மாவை நான் நிமிர்ந்து பார்த்த அந்த நொடி
அவளின் இதயத்தை பல பாகங்களாய் பிளந்திருக்கும்.

அடை மழையாய் என் கண்களிலிருந்து
கண்ணீர் பொழிவதை
அவள் தாங்கவே மாட்டாள்.

கண்களை
இன்னும் கொஞ்சம் சுருக்கி
இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கி

வாயை
ஊரும் பாம்பை போல வடிவாக்கி
பசையிட்டு ஒட்டியதை போல இழுத்து மூடி

கன்னங்களில்
கல்லைக் கட்டிவிட்டதை போல
தொங்கவிட்டு

நெற்றியை
தாராளமாக சுருக்கி
கரடு மேடாக கோடுகளை ஓடவிட்டு

அம்மாவை நான் நிமிர்ந்து பார்த்த அந்த நொடி
அவளின் இதயத்தை பல பாகங்களாய் பிளந்திருக்கும்.

No comments:

Post a Comment