My Blog List

Tuesday, 10 March 2015

~* மடியின் கனம் *~

இன்று என் மடி
நிறைந்திருந்தது

வழ வழாவென்றிருந்தாலும்
இரத்த பிசுப்பாய் இருந்தாலும்

எட்டி எட்டி உதைத்தாலும்
என் உணவை எட்டி
பறித்தாலும்

கதறி கதறி அழுதாலும்
கந்தலாய் துவண்டாலும்

என் மடியும்
தாயானதால்
நான் சிலிர்த்திருந்தேன்...

என்னை சுற்றிலும் ஒரே கூட்டம்

கொசுக்கள் இசையாய் இசைக்க
எறும்புகள் ஆட்டமாய் ஆட
கரப்பான் கை தட்ட
எலிகள் நோட்டமிட

என் மடியிலிருக்கும்
மழழையை
மகிழ்ச்சி ஆரவாரமிட்டு
வரவேற்றன.

இதுவரை இப்படி ஒரு கட்சியை
நான் காணவில்லை! -இதுவரை
என் மடி
இப்படி
கனத்ததில்லையே!

என் தாய்மை எல்லாம்
ஊற்றெடுக்க
என் மடியில் கிடக்கும்
சிசுவை அனைத்துக்கொள்கிறேன்

இனி உன் அலறல்
அடங்கட்டும்
மெல்ல ...!

No comments:

Post a Comment